புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பை பெற பிரித்தானியா இலங்கைக்கு அறிவுரை
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் தேசிய செயற்திட்டத்தை செயற்படுத்தினால் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பெறக்கூடிய ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ள முடியும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. உயர்ஸ்தானிகரிடம் கேளுங்கள் என்ற வேலைத் திட்டத்தின் 12வது பகுதியில் தேசிய செயற்திட்டம் குறித்த பிரித்தானியாவின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பப்பட்டது.
இக்கேள்விக்கு பதிலளித்துள்ள இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரெங்கின் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தேசிய செயற்திட்டம் ஒரு சிறந்த ஏற்பாடு எனவும் பொது மக்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் வலுப்படுத்தவும் அது பெரிதும் உதவுமெனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இலங்கையின் அபிவிருத்தியை துரிதப்படுத்தவும் வலுப்படுத்தவும் தேசிய செயற்திட்டம் உதவும் எனவும் இதனை செயற்படுத்துவதன் மூலம் புலம்பெயர் மக்களின் உதவிகளை பெற முடியும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply