ஐ.தே.க.வினால் ஒரு போதும் ஆட்சியமைக்க முடியாது !

சிங்கள பௌத்த மக்களின் வாக்கு வங்கி ஐ.தே.க.வுக்கு இல்லாமல் போய் விட்டது. அந்த வாக்குகளை பெற்றுக்கொள்ளாது ஐ.தே.க.வினால் ஒரு போதும் ஆட்சியமைக்க முடியாது என்று பாலித ரங்கே பண்டார எம்.பி. தெரிவித்தார். ரணிலின் அதிகாரத்தை பாதுகாப்பதற்காக அல்ல நாட்டை பாதுகாக்கவே மகாசங்கத்தினரோடு அணி திரண்டுள்ளோமென்றும் அவர் தெரிவித்தார்.

ஹைட் பார்க்கில் நடைபெற்ற ஐக்கிய பிக்கு முன்னணியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பாலித ரங்கே பண்டார எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பண்டாரநாயக்க ஸ்ரீமாவோ எல்லோரும் சிங்கள பௌத்தர்களின் வாக்கு வங்கிகளினாலேயே வெற்றி பெற்றனர். இதனை ரணில் விக்கிரமசிங்க புரிந்து கொள்ள முடியாதுள்ளது. ஐ.தே.கட்சிக்கு இன்று சிங்கள பௌத்த மக்களின் ஆதரவு கிடையாது. அதனைப் பெற்றுக்கொள்வதற்கான திட்டங்களும் கட்சியிடம் கிடையாது. எனவே தான் நாம் மகா சங்கத்தினரோடு இணைந்துள்ளோம். எதிர்காலத்தில் மேலும் பலர் உண்மைகளை புரிந்து கொண்டு எம்மோடு இணைவார்கள் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply