இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் அக்கறை இன்றி செயற்பட்டனர் – விக்கிலீக்ஸ்

இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இராஜதந்திர தகவல்களை ஏற்றுக்கொள்வதில் அக்கறையின்றி இருந்ததாக எரிக்சொல் ஹெய்ம் குற்றம் சுமத்தியுள்ளார். எரிக்சொல்ஹெய்மின் இந்த கருத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு தரப்பினரும் நோர்வேயின் தரப்பின் தகவல்களுக்கு உரிய மதிப்பளிக்கவில்லை என்று எரிக்சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல் 2007 ஆம் ஆண்டு ஜுலை 24 ஆம் திகதியன்று அமெரிக்கத் தூதரகத்தினால் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமெரிக்காவில் காங்கிரஸ்காரர்களை போல சிங்கள வாக்குகளை குறி வைத்து செயற்படுகிறார். தாம் கடைசியாக ராஜபக்ஷவை சந்தித்தபோது அவர் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க எவ்வித திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை என்று சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் சிறந்த தமிழ் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் மரணமானதன் பின்னர் அவர்களை உரிய நேரத்தில் தொடர்பு கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டதாக சொல்ஹெய்ம் தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply