இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது!
அமெரிக்க காங்கிரஸில் சமர்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்த வருடத்துக்குள் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் அமெரிக்காவுக்கான தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் இந்த முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில், சர்வதேச பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கோரி குடியரசு பிரதிநிதி மைக்கல் கிறிம் இந்த தீர்மானத்தை காங்கிரஸில் முன்வைத்தார்.
எனினும் இந்த வருடத்துக்குள் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியாதபடி அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் செயற்பாடுகளை முன் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply