சார்ள்ஸ் பெற்றி தொடர்பில சர்ச்சை நிறைவுக்கு வந்தது
இலங்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட, சார்ள்ஸ் பெற்றி என்பர் தொடர்பிலான சர்ச்சைக்கு முற்றிப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தகாலத்தில் ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கான பொறுப்புகள், 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஐக்கிய நாடுகளின் பொது செயலாளரால், தொராயா ஒபாய்ட் என்பவருக்கு வழங்கப்பட்டது.
எனினும் ஒன்பது மாதங்கள் வரையில் அவர் அறிக்கையினை சமர்ப்பிக்காததைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையில் சிரேஷ்ட உறுப்பினராக இருந்து பதவி விலகிய சார்ள்ஸ் பெற்றியிடம் இந்த பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தன.
எனினும், அவர் ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளை மேற்கொள்வதுடன், நோர்வே அரசாங்கத்தின் நிதியிடலின் கீழ், மியன்மாரிலும் வேலைத்திட்டம் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளுக்கு எதிரானது என்று ஊடகங்கள் சுட்டிக்காட்டி இருந்தன.
இது தொடர்பில் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகளின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதற்கு பதில் வழங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ, இந்த பொறுப்புக்களை ஏற்ற சார்ள்ஸ் பெற்றி, ஐக்கிய நாடுகள் சபையின் பகுதி நேர உத்தியோகத்தராகவே இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் விதிகள் அவருக்கு பொருந்தாது எனவும், அவர் ஐக்கிய நாடுகளின் வேலைத்திட்டத்துடன், வேறு வேலைத்திட்டங்களிலும் ஈடுபடலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply