13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டு
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 13ம் திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமை தொடர்பில் ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஒரு தரப்பினர் மாகாணசபை முறைமைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அதேவேளை, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட மற்றுமொரு தரப்பு மாகாணசபை முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டுமென கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜாதிக ஹெல உறுமய, ஜே.என்.பி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும், பாதுகாப்புச் செயலாளரும் மாகாண சபை முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டுமென கோரியுள்ளனர். கொம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி உள்ளிட்ட மற்றுமொரு தரப்பினர் மாகாணசபை முறைமை இல்லாதொழிக்கப்படக் கூடாது என வலியுறுத்தி வருகின்றன.
மாகாணசபை முறைமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஜாதிக ஹெல உறுமய கட்சி தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாகாணசபை முறைமை வடக்கு கிழக்கில் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால், பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என ஜே.என்.பி மக்களை தெளிவுபடுத்தி வருகின்றது.
இந்த நிலைமை நீடித்தால் தெற்கு மக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆளும் காலம் தொலைவில் இல்லை என ஜே.என்.பி தலைவர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, 13ம் திரு;தச் சட்டத்தை ரத்து செய்ய அனுமதிக்கப் போவதில்லை என அமைச்சர் வாசுதெவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் முனைப்பாது நாட்டுக்கு பாரிய பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply