பிரித்தானியாவிலிருந்து 60 அகதிகளை நாடு கடத்த தீர்மானம்

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 60 அகதிகளை, பிரித்தானியா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தவுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகில் உள்ள கோல்புறூக் தடுப்பு முகாம்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் அகதிகள் அங்கு கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படக் கூடிய ஆபத்து இருப்பதால் நாடு கடத்தலை அதனைத் தடுத்து நிறுத்த முன்வருமாறு பிரித்தானிய அமைப்பொன்று அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply