லெபனான் குண்டு வெடிப்பில் இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை
லெபனான் பேரூட்டில் நேற்றிடம்பெற்ற சிற்றூர்ந்து குண்டு வெடிப்பு காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை லெபனானின் இலங்கைக்கான தூதுவர் ரஞ்சித் குணரத்ன தெரிவித்துள்ளார். குறித்த குண்டு தாக்குதலில் இராணுவ பிரதானி உள்ளிட்ட பலர் பலியாகினர். இதுதவிர, 80 பேர் வரை காயமடைந்தனர்.
7 வருடங்களின் பின்னர் பேரூட்டில் இடம் பெற்ற பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் இதுவென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த 85 ஆயிரம் பேர் வரை லெபனானில் பல்வேறுப்பட்ட தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் லெபனானில் அடிக்கடி ஏற்படுகின்ற மோதல்களில் இலங்கையைச் சேர்ந்த எவரும் இதுவரை பாதிப்புக்கள் ஏற்படவில்லையென லெபனானின் இலங்கைக்கான தூதுவர் ரஞ்சித் குணரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் லெபனானுக்கு தொழிலுக்காக அனுப்பபடுபவர்கள் வருகை தரும் பிரதேசங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வெளிவிவகார அமைச்சுக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கும் தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் லெபனானின் இலங்கைக்கான தூதுவர் ரஞ்சித் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply