காணாமல் போனோரைக் கண்டறியும் குழு சத்தியாக்கிரகத்தில் குதிக்கிறது

காணாமல் போனோரைக் கண்டறியும் குழுவினால் எதிர்வரும் 22ஆம் திகதி சத்தியாக்கிரகம் ஒன்று நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டமானது கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக இடம்பெறவுள்ளது. பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகும் சத்தியாக்கிரகப் போராட்டம் 4.00 மணி வரை 2 மணித்தியாலயங்களுக்கு நடைபெறவுள்ளது.

இதன்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்படவிருப்பதாகவும் மேற்படி குழு அறிவித்துள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் ௭க்நெலிகொட கடத்தப்பட்டு வரும் 22ஆம் திகதியுடன் 1000 நாட்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு ௭க்நெலிகொட சார்பாகவும் ஏனைய காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் சார்பாகவுமே இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டோரின் உறவினர்களும் இதில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர்களையும் வெளியிடுமாறும் காணாமற்போனவர்கள் தொடர்பாக சுயாதீன ஆணைக்குழு விசாரணை ஒன்றையும் ஏற்படுத்துமாறு வலியுறுத்தப்படவிருப்பதாகவும் அந்த அமைப்பினால் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply