கரை ஒதுங்கும் மீன்களை உண்ண முடியும்!
கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்ட கடற்கரைகளில் கரையொதுங்கிய மீன்களில் இராசயன நஞ்சு பதார்த்தம் இல்லாமையினால், குறித்த மீன்களை சாப்பிட முடியும் என ஆரம்பக்கட்ட ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளதாக நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமைத்துவ நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கும் அபிவிருத்திக்குமான இயக்குனர் டாக்டர் கே.அருளானந்தம் கருத்து தெரிவிக்கையில்,
‘மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கரையொதுங்கிய இறந்த மற்றும் உயிருடனான மீன்களின் மாதிரிகள் மற்றும் மீன்கள் நாராவினால் எடுத்து செல்லப்பட்டு இராசயன பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டது.
இந்த பகுப்பாய்வின் போது இந்த மீன்களில் இராசயன நஞ்சுப்பதார்த்தம் இல்லை என்பது ஆரம்பக்கட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. எனினும் தொடர்ந்து இந்த மீன்கள் பரிசோதணை செய்யப்பட்டு வருகின்றன. கடலில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றமும் கடலின் அடியில் ஏற்பட்டுள்ள குளிர் நிலையினாலும் இந்த மீன்கள் கரையொதுங்குகின்றன.
கடலில் இந்த மீன்கள் உண்ணும் நுண்ணுயிர் தாவரங்கள் அழுகியுள்ளதால் இந்த சிறிய மீன்களுக்கு உற்கொள்ள உணவு இல்லாததாலும் ஓட்சிசன் குறைபாட்டினாலும் இந்த மீன்கள் கரையொதுங்கி வருகின்றன’ என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply