கலைப் பிரிவில் படித்தவர்களும் தாதியர் ஆக வாய்ப்பு! எஸ்.பி.திசாநாயக்க

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கலைப் பிரிவில் அனுமதி பெறும் மாணவர்களுக்கும் எதிர்காலத்தில் தாதியர் பட்டம் பெறுவதற்கான வாயப்புகள் வழங்கப்படவிருப்பதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  கண்டியில் நடைபெற்ற வைபவமொன்றில் இந்த தகவலை வெளியிட்டுள்ள அவர், நாட்டிற்கும் உலகிற்கும் தேவையான பட்டப் படிப்புகளை பல்கலைக்கழகங்களில் வழங்க வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தினார்.

இலங்கையில் தற்போது சுமார் இரண்டு லட்சம் தாதியர் வெற்றிடங்கள் நிலவுவதாக சுட்டிக்காடடியுள்ள அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, கலைப் பிரிவில் அனுமதி பெறும் மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களான தாவரவியல், இரசாயனவியல் போன்ற விடயங்கள் தொடர்பான அடிப்படை பாடங்களை சொல்லிக்கொடுத்துவிட்டு பின்னர் அவர்கள் தாதியர் பட்டப்படிப்பை மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்படும் என்றும் அவர் கூறுகின்றார்.

அரசாங்க மருத்துவர்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்புகள் காணப்பட்டாலும் பரவாயில்லை என்றும் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கூறினார்.

அமைச்சரின் இந்த தீர்மானத்தை வரவேற்றுள்ள அரசாங்க தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய இதில் சில பிரச்சினைகள் இருப்பதாகவும் கூறுகின்றார்.

‘தற்போதுள்ள நடைமுறையில் கல்வி பொது தாராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் அறிவியல் பாடங்களில் சித்தி பெற்றவர்கள் இஸட் ஸ்கோர் புள்ளிகள் அடிப்படையில் தாதியர் பட்டப்படிப்பிற்கு தெரிவாகின்றனர்.அமைச்சரின் இந்த தீர்மானம் காரணமாக ஆட்சேர்ப்பு தொடர்பான அடிப்படை கல்வி தகுதிகளில் சிக்கல்கள் ஏற்படுகின்றது. அதுமட்டுமின்றி ஏற்கனவே கலைப் பிரிவில் கல்வி கற்ற மாணவர்கள் தாதியர் பட்டப்படிற்காக விஞ்ஞான பாடத்துடன தொடர்புடைய விதானங்களை கிரகிக்க முடியுமா என்ற சிக்கலும் இருக்கவே செய்கிறது.’ என்றார் சமன் ரத்தினப்பிரிய.

இலங்கையில் தற்போது க.பொ.த. உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பாடங்களில் சித்தியடைந்தவர்களே பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களில் தாதியர் பட்டப் படிப்பிற்கும், தாதியர் பயிற்சிக் கல்லூரிகளில் டிப்ளோமா பாட நெறிக்கும் தெரிவாகும் வாய்ப்பை பெறுகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply