தமிழ்நாடு செல்கிறது தமிழத் தேசியக் கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் சிலர் அடுத்த மாதமளவில் தமிழ் நாட்டிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புதுடெல்லிக்கு விஜயம் செய்து இந்திய மத்திய அரசாங்கப் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கையர்களின் நிலைமை குறித்து தமிழகத்திற்கு விஜயம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply