விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்காக விசேட நீதிமன்றம் அமைக்க திட்டம்
சிறையிலுள்ள தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களை விசாரணை செய்ய விசேட நீதிமன்றங்கள் நான்கினை அமைக்கும் திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு மன்னார் மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா தெரிவித்தார்.
கடந்த மே மாதம் பாராளுமன்றத்தில் விடுதலை புலி சந்தேக நபர்கள் தொடர்பில் அரசாங்கம் பேசியிருந்தது. இதன்போது 359 புலி சந்தேக நபர்கள் உள்ளூர் சிறைகளில் இருப்பதாகவும் இவர்களுக்கெதிராக 309 வழக்குகள் காணப்படுவதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்தது.
இதற்கமைவாக மன்னார், வவுனியா, அநுராதபுரம் மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் விசேட நீதிமன்றங்களை அமைத்து விடுதலைப் புலி சந்தேக நபர்களின் வழக்குகளை விசாரணை செய்ய நீதியமைச்சு நடவடிக்கை ௭டுத்துள்ளது ௭ன்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply