கூடங்குளம் அணுமின் நிலையத்தால் இலங்கையின் 15 லட்சம் மக்களுக்கு உயிராபத்து

இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தால் வட மாகாணம் உள்ளிட்ட இலங்கையின் 15 லட்சம் மக்களுக்கு உயிராபத்து ஏற்பட்டுள்ளதென மக்கள் போராட்ட இயக்கம் அச்சம் வெளியிட்டுள்ளது.
கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மக்கள் போராட்ட இயக்கத்தின் அரசியல் விவகார செயலாளர் புபுது ஜயகொட இவ்வாறு அச்சம் வெளியிட்டார்.

அணுமின் நிலையத்தால் பாதிப்பு ஏற்பட்டால் நட்டஈடு பெற அரசு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகவும் அணுமின் நிலையம் வெடித்தால் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழப்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலைய தொழிநுட்பவியலாளர்கள் மற்றும் அது அமைக்கப்பட்டுள்ள இடம் குறித்து பிரச்சினை ஏற்பட்டுள்ளதென அவர் கூறினார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்க அரசு இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் அதனால் மக்கள் போராட்ட இயக்கம் இதுபற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் புபுது ஜயகொட குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply