இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் நவ்ரூ தடுப்பு முகாமிற்கு மாற்றம்

இலங்கையைச் சேர்ந்த 23 புகலிடக் கோரிக்கையாளர்கள் டர்வீனிலிருந்து நவ்ரூ தடுப்பு காவல் மையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய கடல் செயலாக்க கொள்கைக்கு ஏற்பட மேற்படி குழுவினர் நவ்ரூவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பெரும்பாலானவர்கள் கிறிஸ்மஸ் தீவிலிருந்து நவ்ரூவிற்கு விசேட விமானம் மூலம் அழைத்துச்செல்லப்பட்டனர். ஆனால் சிலர் ஏற்கனவே டர்வின் தடுப்பு மையத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் புதிய கொள்கைக்கு அமைவாக புகலிடக் கோரிக்கையாளர்கள் நவ்ரூவிற்கு இடமாற்றம் செய்யப்படுவது தொடர்வதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

படகின் மூலம் மேலும் 11 பேர் அடங்கிய புகலிட கோரிக்கையாளர்கள் நேற்று மாலை கிறிஸ்மஸ்தீவை சென்றடைந்ததை தொடர்ந்து இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply