இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு பூரண பாதுகாப்பு – தமிழக பொலிஸ்

இலங்கையர்களுக்கு தமிழ் நாட்டு பிராந்தியத்தில் சுற்றுலா மேற்கொள்ளும் போது, எந்த வித பாதுகாப்பு நெருக்குதல்களும் இல்லாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள முடிந்துள்ளதாக தமிழ்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளார். அந்த நாட்டு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தமிழக காவல்துறையினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையர்கள் பலர் மத வழிபாட்டுகளுக்காக தமிழகம் வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களுக்கான உரிய பாதுகாப்புக்களை வழங்க தமிழ் நாட்டு காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இலங்கை யாத்திரிகர்கள் வருகை தரும் தமிழ் நாட்டில் அமைந்துள்ள மத ஸ்தலங்களின் பாதுக்காபிற்காக விசேட படை பிரிவினர் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், வர்தகம், மருத்துவம், அரசியல், சுற்றூ மற்றும் விளையாட்டு போட்டிகளுக்காக இலங்கையர்கள் பெறும்பாலானோர் தமிழகம் வருகின்றனர்.

இவை அனைத்துக்கும் ஏற்றவகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply