தமிழக க்யூ பிராஞ்ச் விசாரணையில் கிளிநொச்சியை சேர்ந்த ஐவர்.

இலங்கையில் இருந்து படகு மூலம் வந்த 5 தமிழ் வாலிபர்கள் இந்திய கடலோர காவல் படையினரால் பிடிக்கப்பட்டனர். அவர்களுக்கு புலிகளுடன் தொடர்புள்ளதா என க்யூ பிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய கடலோர காவல் படையினர் ராமநாதபுரத்தை அடுத்த மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எம்.என்.ஆர்.1-230412 என்ற எண் கொண்ட இலங்கையைச் சேர்ந்த ஒரு படகை வழிமறித்தனர்.

அதிலிருந்த 5 வாலிபர்களையும் மண்டபம் கடலோரக் காவல் படை முகாமிற்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த ஐவரும் கிளிநொச்சியை சேர்ந்த தமிழர்கள் எனத் தெரியவந்தது. அவர்களது பெயர் சுதர்சன் (18), கமலதாசன் (24), தில்லைநாதன் (24), ஸ்ரீதரன் (22), கோகுலராஜன் (24).

மன்னார் மாவட்டம் வலைப்பாடு பகுதியில் தங்கி சுனாமி உதவி மூலம் இலங்கை அரசு வழங்கிய படகை வைத்து கடந்த 4 ஆண்டுகளாக மீன்பிடித்து தொழில் செய்து வந்ததாகவும், தற்போது இலங்கையில் நடக்கும் போர் காரணமாக உயிரை காப்பாற்றிக் கொள்ள அகதிகளாக இங்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் க்யூ பிராஞ்ச் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


Responses are currently closed, but you can trackback from your own site.

Comments are closed.