இலங்கை விவகாரம் தொடர்பாக ஐ.நா செயலாளர்-இந்திய வெளியுறவு அமைச்சர் ஆராய்வு

இலங்கையின் வடபகுதி நிலை குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் தாம் நேற்று  கலந்துரையாடியதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பென்கீ மூன் தெரிவித்துள்ளார்.

வடக்கின் யுத்தப் பிரதேசத்திலிருந்து மக்களை வெளியேற்றுவது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
குறுகிய பரப்புக்குள் வாழும் அப்பாவி மக்கள் நலனைக் கொண்டு யுத்தத்தை நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் பாரிய மனித அழிவுகளே அங்கு ஏற்படும். ஆகவே காலதாமதம் காட்டாது இருதரப்பினரும் உடனடியாக யுத்தத்தை நிறுத்த வேண்டும். இதுவே சர்வதேசத்தின எதிர்பார்ப்புமாகும்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று காணப்படுமெனத் தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply