வடபகுதி இரணுவ நடவடிக்கையில் பொதுமக்களுக்குப் பாதிப்பில்லை:ஐ நா செயலரிடம் ஜனாதிபதி
இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கைகள் வடக்கிலுள்ள அப்பாவிப் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே மேற்கொள்ளப்பட்டுவருவதாக ஐ.நா. செயலாளர் பாங் கீ மூனூக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விளக்கிக் கூறியுள்ளார்.
தற்போது புதுடில்லியில் தங்கியிருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து வினவியபோதே ஜனாதிபதி மேற்படி உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
இலங்கையில் தீவிரவாதிகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் வடக்கே பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த சிவிலியன்களின் நிலைபற்றியும் பாங் கீ மூன் வினவியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
புலிகள் அமைப்புக்கு எதிராக மனிதாபிமான நடவடிக்கையொன்றை மேற்கொள்ள வேண்டி இலங்கையின் பாதுகாப்புப்படையினர் நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள், மனிதக்கேடயங்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அப்பாவித் தமிழ் மக்களை விடுவிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமைப்பாடாகும் என்றும் ஜனாதிபதி பாங் கீ மூனுக்கு விளக்கிக் கூறியுள்ளார்.
சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இத்தொலைபேசி உரையாடலின்போது அப்பாவிப் பொதுமக்களை விடுவிப்பதோடு ஆயுதங்களைக் கீழேவைத்து வன்முறைக்கு முடிவுகட்ட வேண்டும் என டோக்கியோ இணைத்தலைமை நாடுகள் அண்மையில் விடுத்த கோரிக்கையினை புலிகள் அலட்சியம் செய்துவிட்டமையையும் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் ஐ.நா செயலாளர் பாங் கீ மூனின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply