விடுதலைப் புலிகளுடன் சமரசம் பேச அரசாங்கம் தயார் இல்லை:அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத முறைகளைக் கைவிட்டு, இலங்கையின் பிரதான ஜனநாயக முறைக்குத் திரும்பவேண்டுமென பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் போர்நிறுத்தத்துக்குச் செல்ல வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருக்கும் பிரித்தானியாவின் கனிஷ்ட வெளிவிவகார அமைச்சர் பில் ரமெல், அவ்வாறு விடுதலைப் புலிகள் சரணடைந்தால் அவர்களுக்கு இலங்கைத் தலைவர்கள் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனக் கூறினார்.

“இனப்பிரச்சினைக்கு அனைத்து சமூகங்களின் அபிலாசைகளையும் நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வொன்றே பொருத்தமானது என்ற எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை” என அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் பயங்கரவாத முறைகளைக் கைவிட்டு, பிரதான ஜனநாயக அரசியலில் இணைந்து முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனத் தாம் கோரிக்கை விடுப்பதாகவும், விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக உள்ளவர்கள் ஜனநாயகத்துக்குப் புலிகள் ஜனநாயகத்துக்கு வருவதை ஊக்குவிக்க வேண்டும் எனவும் பில் ரமெல் கூறினார்.

எனினும், விடுதலைப் புலிகளுடன் சமரசம் பேச அரசாங்கம் தயாரில்லையென பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply