பெனாசிர் மரணம் பற்றி ஐ.நா. கமிஷன் விசாரிக்கிறது

பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் மனைவியும், முன்னாள் பிரதமருமான பெனாசிர் மரணம் குறித்து ஐ.நா.சபை விசாரிக்க கமிஷன் அமைக்கவேண்டும் என்று சர்தாரி தொடக்கம் முதலே கோரிவருகிறார். இதை ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்த ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கீ மூன் சம்மதித்தார். இதை தொடர்ந்து 3 பேர் கொண்ட கமிஷன் அமைக்கப்படுகிறது. இந்த கமிஷனின் ஆயுள் காலம் 6 மாதம் ஆகும் என்று பான் கீ மூன் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலுக்கு அவர் கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அவர் இதை தெரிவித்து இருக்கிறார்.

இது உண்மை அறியும் குழு தான் என்றும் குற்றப் புலனாய்வு விசாரணை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த கமிஷனின் தலைவராக சிலி நாட்டின் ஐ.நா.தூதர் ஹெரால்டோ முனோஸ் இருப்பார் என்று கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply