குற்றப்பிரேரணை தொடர்பில் விசாரணை நடத்த 11 பேர் அடங்கிய குழு
பிரதம நீதியரசர் மீது முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் குற்றப்பிரேரணை தொடர்பில் விசாரணை நடத்தவென அமைக்கப்படவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் மேலும் இருவர் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவில் 9 பேர் உள்ளடங்குவர் என முன்னர் அறிவிக்கப்பட்டபோதும் அது 11ஆக உயர்த்தப்பட்டுள்ளதென பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
அதன்படி ஆளும் கட்சியில் இருந்து 7 பேரும் எதிர்கட்சிகளான ஐதேகவில் இருந்து 2 பேரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஒருவரும் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஒருவரும் பெயரிடப்படவுள்ளனர்.
இதேவேளை, தமது பிரதிநிதிகளை விரைவில் பெயரிடுமாறு ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பிற்கு அறிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply