செலவுத்திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
2013ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் நிதியமைச்சரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் ஒரு மணியளவில் அடுத்த ஆண்டுக்கான ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து (1335) பில்லியன் ரூபாவுக்கான வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதியினால் முன்வைக்கப்படுகின்ற வரவு-செலவுத்திட்ட முதலாம் வாசிப்பினைத் தொடர்ந்து இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை வரை இடம்பெறுவதுடன் அன்றைய தினம் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாவது வாக்கெடுப்பும் இடம்பெறும்.
எட்டுத் தினங்கள் இடம்பெறும் இவ்விவாதத்தினையடுத்து இம்மாதம்19ஆம் திகதி திங்கட்கிழமை இருதரப்பு இணக்கப்பாடுகளின் அடிப்படையில் முக்கிய 22 அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதம் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி வரை 16 தினங்களுக்கு இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
இதன்படி ஒவ்வொரு அமைச்சு மீதான விவாதத்துக்கும் இரண்டு மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை, நாளொன்றுக்கு 8 மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டு விவாதிக்கப்படவுள்ளன.
இறுதியில் சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி மாலை 6 மணியளவில் இடம்பெறவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply