இலங்கை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தண்டனை பெறக்கூடிய குற்றம் புரிந்து விட்டனர்
இலங்கையின் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்காவின் சொத்துகள் பற்றிய விபரத்தை பகிரங்கப்படுத்தியதன் மூலம் இலங்கை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தண்டனை பெறக்கூடிய குற்றம் ஒன்றைப் புரிந்துள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணையை வாபஸ்பெறுமாறு கோரி கையெழுத்து வேட்டை ஒன்றை கொழும்பு மேல்நீதிமன்ற வளாகத்தில் தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தினர் நடத்தினார்கள்.
அப்போது அங்கு செய்தியாளர்களிடம் உரையாற்றிய அந்த சங்கத்தின் தலைவரான சட்டத்தரணி உபுல் ஜயசூரிய இந்தக் கருத்தை முன்வைத்தார்.
குற்றவியல் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட பின்னர், பிரதம நீதியரசரின் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் பற்றிய விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன என்றும் குற்றவியல் பிரேரணை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அது குறித்த விபரத்தை வெளியிட்டமை, நாடாளுமன்ற விதிமுறைகளின்படி ஒரு குற்றம் என்றும் அவர் கூறினார்.
ஆகவே இந்தக் குற்றத்தை செய்த ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு நடத்திஇ தண்டனை வழங்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தக் குற்றவியல் பிரேரணை குறித்த விடயங்களை கண்காணிக்க சர்வதேச கண்காணிப்பாளர்கள் அவசியம் என்றும் சட்டத்தரணிகள் அங்கு வலியுறுத்தினார்கள்.
தமது கையெழுத்து வேட்டை நாடுமுழுவதும் நடைபெறும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply