இலங்கையின் நிலைப்பாடு என்ன ? ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி

மரண தண்டனை குறித்த இலங்கையின் நிலைப்பாடு என்ன என்பதனை தெளிவுபடுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைப் பிரதிநிதி பெர்னாட் சாவேஜிற்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை குறித்த தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மரண தண்டனையை சிறைத்தண்டனையாக மாற்றுவது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதவான் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிப்பது குறித்து கவனம் செலுத்துமாறு அமைச்சர் திஸ்ஸ கரலியத்த கோரியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply