13ஆம் திருத்த சட்டமும் அமெரிக்காவும், இலங்கை அரசு விளக்கம்

மாகாணசபை தேர்தல் முறைமை தொடர்பில் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். 13ஆவது திருத்தமே கசக்கிறது அவ்வாறானதொரு திருத்தம் அமெரிக்க அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்டு இருக்காவிட்டால் அமெரிக்கா பல இராஜ்ஜியங்களாக பிரிந்திருக்கும் என அரசாங்கம் தெளிவுப்படுத்தியது.

ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் சார்பில் அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, சுசில் பிரேமஜயந்த மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைந்து, மாகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னதாக கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர், மாகாண சபை முறைமையையே முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும் என அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான தேசிய சுந்திர முன்னணி மற்றும் ஹெல உறுமய ஆகியன கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என்று வினவினர்.

அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில்,

13ஆவது திருத்தமே சிலருக்கு கசக்கிறது. 13ஆவது இலக்கத்தையே சில விமானங்கள் வெறுக்கின்றன. அவ்வாறான விமானங்களில் 13ஆவது இலக்கம் கொண்ட ஆசனமே இல்லை. எனினும் அமெரிக்காவின் அரசியலைமைப்பில் கூட 13ஆவது திருத்தம் இருக்கிறது.

13ஆவது திருத்தத்தில் இருக்கும் நல்ல விடயங்கள் சிலருக்கு தெரிவதில்லை. எனினும் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீபன் பில் பெல்ட் இயக்குநரினால் டேனியல் டேவிட் நடித்த லிங்கன் எனும் திரைப்படம் அமெரிக்காவின் அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தம் தொடர்பானது.

இந்த படத்தை பார்த்தால் 13ஆவது திருத்தம் கசக்காது அமெரிக்க அரசியலமைப்பில் 13ஆவது திருத்தத்தை கொண்டு வந்திருக்காவிடின் அமெரிக்கா பல ராஜியங்களாக பிரிந்திருக்கும் அமெரிக்காவே இருந்திருக்காது’ என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply