மாகாண சபை முறைமை சமூக ஜனநாயத்திற்கு எதிராக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது
ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகியன, ஒன்றிணைந்த செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தின. 13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் ரத்து செய்யப்பட்டு மாகாண சபையினை வலுப்படுத்தும் பிறிதொரு முறைமையினை அறிமுகப்படுத்த வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளன.
இந்த 13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை ரத்து செய்வதற்காக தேசப்பற்றுள்ள சக்திகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தேசிய முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்றில் இருக்கும் போது, அரசாங்கத்திற்கு மற்றும் ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் அழுத்தங்களாக கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.
மாகாண சபை முறைமை ரத்து செய்யப்பட்டு வெறுமனே இருக்காது. கிராமத்திற்கு ஏராளமான அதிகாரம் கிடைக்கும் வகையில், உள்ளுராட்சி மாற்று முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்
இது தொடர்பான கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு தமது இரண்டு கட்சிகளும் எதிர்பார்ப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதன்போது தெரிவித்தார்.
மாகாண சபை முறைமை சமூக ஜனநாயத்திற்கு எதிராகவே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த முறைமை 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைச்சாத்திடப்பட்ட ஜே.ஆர். ரஜீவ் ஒப்பந்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது தொடர்பில் மக்களுக்கு தவறான கருத்துக்களே போதிக்கப்பட்டன. இது குறித்து உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் தலையிட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்
எவ்வாறாயினும், கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை ரத்து செய்வது தொடர்பில், இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply