வெலிக்கடை சிறைக் கலவரம்: 10 பேர் கொல்லப்பட்டனர்

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் விசேட அதிரடிப்படையினர் இன்று பிற்பகல் மேற்கொண்ட ஒரு தேடுதல் நடவடிக்கையையடுத்து, அங்கு படையினருக்கும் கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஆயுத மோதலில் கொல்லப்பட்ட 10 பேரின் சடலங்கள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

வெலிக்கடை சிறைச்சாலையின் எல் பிரிவிலேயே இந்தப் பதட்ட நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும், அங்குள்ள கைதிகள் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதனால் நிலைமையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதற்காக கண்ணீர்ப்புகைக்குண்டுத் தாக்குதல் நடத்த நேரிட்டிருப்பதாகவும் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாகிய பிரதி பொலிஸ் மா அதிபர் ஆர்.எம்.சி.ரணவன தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் நிலைமைகள் கட்டுக்கு மீறியிருப்பதனால், சிறைச்சாலைக்கு எதிரில் பேஸ்லைன் பிரதான வீதியில் தெமட்டகொட வரையில் போக்குவரத்து தடைபட்டிருப்பதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிறைக் கைதிகள் பலர் சிறைச்சாலையின் கூரை மீது ஏறியிருந்து அதிரடிப்படையினர் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதற்காக விசேட அதிரடிப்படையினருக்கு உதவியாக இராணுவத்தினரும் அழைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply