எதிர்மறையான முடிவுகளுக்கு வருவது தவறு அமைச்சர் கெஹ லிய ரம்புக்வெல்ல

மாகாண சபை முறையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் தனது வரவு – செலவு திட்ட உரையில் குறிப் பிட்டது முன்னேற்றகரமான ஒரு மாற் றமாகவும் இருக்கலாம். என்றாலும் அதற்கு முன்னர் அதுபற்றி எதிர்மறை யான முடிவுகளுக்கு வருவது தவறு என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹ லிய ரம்புக்வெல்ல நேற்று பாராளு மன்றத்தில் தெரிவித்தார்.

நேற்று வரவு – செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. எஸ். சுமந்திரன் உரையாற்றும் போது ஜனாதிபதி அவர்களின் வரவு – செலவு திட்ட உரையை மேற்கொள்காட்டி பேசிய போதே அமைச்சர் கெஹலிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என அமைச்சர் கெஹலிய ஊடகங்களுக்கு தெரிவித்ததாக சுமந்திரன் எம்.பி. தனது உரையின் போது குறிப்பிட்டார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் கெஹலிய நான் அப்படிக் கூறவில்லை. ‘13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கும் அவசியம் இதுவரை எழவில்லை’ என்றே கூறினேன் என்றார். அத்துடன் இந்தியா உட்பட நாடுகளில் கூட அரசியலமைப்பு பல தடவைகள் திருத்தம் செய்யப்பட்டிரு ப்பதாகவும் அமைச்சர் கெஹலிய சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply