அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றுவதற்காக தமிழர்களுக்கு அழைப்பு

அமெரிக்க இராணுவத்தில் தமிழ்மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.  சிறப்பு மொழித்தேர்ச்சி அடிப்படையில் அமெரிக்காவில் தற்காலிகமாக வசித்து வரும் 550 பேரை முதற்கட்டமாக அமெரிக்க இராணுவம் சேர்த்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.  

ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை பேசக்கூடியவர்கள் இவ்வாறு சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

தமிழ், இந்தி, அரபி, சீன, இக்போ, குர்திஸ், நேபாளி, பாஸ்ரோ, ருஸ்ய மொழிகள் உள்ளிட்ட 35 மொழிகளைப் பேசுவோர் அமெரிக்க இராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளனர். இவர்கள் 10 வாரகால அடிப்படைப் பயிற்சிக்கு பின்னர், பணிகளில் அமர்த்தப்படுவர்.

2 ஆண்டுகள் அமெரிக்காவில் தற்காலிகமாக குடியிருந்த தமிழர்கள் அமெரிக்க இராணுவத்தில் சேரமுடியும். இவர்களுக்கு நிரந்தர அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும்.

இந்த திட்டம் வெற்றிபெற்றால் ராணுவத்தின் எல்லாப் பிரிவுகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்று பென்டகன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க ராணுவத்தில் தற்போது 29,000 வெளிநாட்டவர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply