ஜனாதிபதியின் அழைப்பு நிராகரிப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த பகிரங்க அழைப்பை ஜே.வி.பியும், ஐக்கிய தேசியக் கட்சியும் நிராகரித்துள்ளன. தேசிய, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களில் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி எதிர்க்கட்சிகளிடம் கோரியிருந்தார். எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என குறித்த இரண்டு கட்சிகளும் அறிவித்துள்ளன. ஜனாதிபதியின் இந்த அழைப்பானது யதார்த்தமானதல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனியாக தீர்மானங்களை மேற்கொண்டு சகல விடயங்களை மேற்கொண்டு வருகின்றார் எனவும, ஏதேனும் தவறுகள் நெருக்கடி நிலைமைகளில் மட்டும் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை நாடுவது பொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, எமது கட்சியை இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி கோரவில்லை என ஜே.வி.பி பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி தேசிய விடுதலை முன்னணி என்ற கட்சிக்கே அழைப்பு விடுத்திருந்தார்.
அவ்வாறான ஓர் கட்சி இலங்கையில் கிடையாது எமது கட்சியின் பெயர் மக்கள் விடுதலை முன்ணியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, ஜனாதிபதி எமது கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply