ஆயுதங்களை கீழே வைத்து சரணடையுமாறு புலிகளுக்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு
“ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுப் படையினரிடம் சரணடையுமாறு நான் மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு விடுக்கின்றேன். இதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.எக்காரணத்தைக் கொண்டும் படைநடவடிக்கை நிறுத்தப் படமாட்டாது. அப்பாவித் தமிழ் மக்களை மீட்பதற்காக புலிகள் ஆயுதங்களைக் கீழேவைத்துவிட்டு சரணடைய வேண்டுமெனவும் ஜனாதிபதி உறுதியாகத் தெரிவித்தார்.
புலிகளை கடலில் தள்ளவும் முடியாத சூழலே தற்போது தோன்றியுள்ளது. அவர்களைக் களப்பில்தான் தள்ளி விட வேண்டியுள்ளது. எனினும் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு சரணடைய மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
யுத்தத்தையோ வேறு எதனையோ காரணம் காட்டி மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை மீள அபகரிக்க ஒருபோதும் அரசு முற்படவில்லை என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமெனவும் ஜனா திபதி தெரிவித்தார்.
வடமேல் மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலை மையில் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்ட மொன்று நேற்றுக் குருநாகல் மாளிகாபிடிய மைதானத்தில் நடைபெற்றது.
அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, சமல் ராஜபக்ஷ, மேர்வின் சில்வா, டி. பி. ஏக்கநாயக்கா, சாலிந்த திசாநாயக்க, அனு ரபிரியதர்ஷன யாப்பா, திஸ்ஸவிதாரண, மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனார த்ன உட்பட பெரும்பாலான அமைச்சர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி இங்கு மேலும் கூறிய தாவது:-
முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்க இலங்கையை ஒரே நாடாகவே ஜே.ஆர். ஜயவர்தனவிடம் பாரம் கொடுத்தார். எனினும் நாம் நாட்டைப் பொறுப் பேற்கையில் புத்தளம் வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்கள் புலிகளுக் குத் தாரை வார்க்கப்பட்டிருந்தது.
2005 ஆம் ஆண்டு இந்த நாட்டை என்னி டம் ஒப்படைத்த மக்கள் ஒரே ஒரு ஆணையை மட்டுமே எனக்கு வழங்கினர். பயங்கரவாதத்திடமிருந்து நாட்டைப் பாது காப்பதே அந்த ஆணையாகும். அதனை நான் உறுதியுடன் நிறைவேற்றியுள்ளேன்.
முல்லைத்தீவில் இப்போது இறுதி யுத்தம் நடக்கிறது. புலிகள் போக்கிட மின்றி தற்போது சிவிலியன்களுக்காக ஒதுக் கப்பட்டுள்ள பிரதேசத்தில் ஒழிந்து கொண் டுள்ளனர்.
நான் குருநாகல் மாவட்டத்திற்கு வருகை தரும்போது பெருமைப்பட முடிகிறது. வடக்கு யுத்தத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான படைவீரர்கள் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே அந்தப் பெருமைக்குக் காரணமாகும். இப்பிரதேச மக்களும் என்னைப் போன்றே பெருமைப்படுவீர்கள் என்பது உறுதி. தற்போது நாட்டில் சகல பகுதிகளிலும் பாரிய அபிவிருத்திகள் இடம் பெறுகின்றன என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply