இந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும் – ரணில்

மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க முடியாதாயின் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.  வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் கோழி இறைச்சியின் கிலோ விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. பாண் இறாத்தல் ஒன்று இரண்டு ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

இவை அனைத்தையும் செய்ததன் பின்னர், அரச சேவையாளரின் ஒரு நாள் வேதனம் 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. எனவே நாங்கள் வேதன அதிகரிப்பை கோருகின்றோம்.

இதன் காரணமாக மக்களை ஒன்றிணைத்து வீதியில் இறங்க தீர்மானித்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ள வேதன அதிகரிப்பு ஒரு கங்கணம் கட்டும் ஒரு செயல் என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார். அரச சேவையாளர்களுக்கான வேதனம், ஜனவரி மாதத்தின் பின்னரே வழங்கப்படும். எனினும் அது கட்டம் கட்டமாக வழங்கப்படும்.

முதல் கட்டம் மே மாதமும, அடுத்த கட்டம் செப்டம்பர் மாதத்திலும் வழங்கப்படும். இது வேதன அதிகரிப்பு அல்ல.

மோசடி மற்றும் ஏமாற்றம் மற்றும் கண்துடைப்பு நடவடிக்கைகளாகவே இதனை கருத வேண்டும் என ஜே வீ பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply