ஈழத் தமிழரின் இன்னல்களை ஐநாவில் தெளிவுபடுத்தினோம் – ஸ்டாலின் தெரிவிப்பு
ஈழத் தமிழரின் இன்னல்கள் மற்றும் வாழ்க்கைத் தரம் குறித்து ஐ.நா.விடமும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடமும் சிறப்பாக விளக்கியுளள்ளோம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஐ.நா. சபையிடமும், ஐ.நா. மனிதஉரிமை ஆணையத்திடமும் டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை அளித்து விட்டு இன்று சென்னை திரும்பினார் ஸ்டாலின். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னையில் நடந்த டெசோ மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ.நா.சபையில் உள்ள மனித உரிமைகள் கழகத்தில் வழங்குவதற்காக நானும், டி.ஆர்.பாலுவும் சென்றோம். ஐ.நா.சபை மனித உரிமை கழகத்தில் டெசோ மாநாட்டு தீர்மானங்களை வழங்கி இலங்கை தமிழர்களின் இன்னல்கள் பற்றி எடுத்து கூறினோம்.
பின்னர் லண்டனில் நடை பெற்ற உலகத் தமிழர்கள் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கை தமிழர்களின் நிலைமைகள் பற்றி எடுத்துக் கூறினோம்.
இந்த பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் கழக அமைப்பு நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply