காணாமல் போதல் தொடர்பாக விசாரணைகள் நடைபெறுகின்றன – பாலித கொஹணே
காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் சட்டவிரோத பலவந்த காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. சட்டவிரோத பலவந்த காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பிலான விசேட அமர்வுகளில் இலங்கை தொடர்பிலும் கருத்துக்கள் வெளியடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதற்கான விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கொஹணே தெரிவித்துள்ளார்.
காணாமல் போதல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே பிரதிக் காவல்துறை மா அதிபர் ஒருவரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 100 காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் அறிக்கைகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சித்திரவதைகளை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply