வெலிக்கடை சிறை மோதலில் வெளிநாட்டவரோ, தமிழ் கைதிகளோ எவரும் இறக்கவில்லை!
கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் வெளிநாட்டு மற்றும் விடுதலைப்புலி சந்தேக நபர்கள் எவருமே உயிரிழக்க வில்லை என முதற்கடட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பி.டபிள்யூ. கொடிப்பிலி தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (09) மாலை வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 27 கைதிகள் உயிரிழந்தனர்.
இதன்போது வெளிநாட்டு கைதிகளும் தமிழ் அரசியல் கைதிகளும் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இச்சிறைச்சாலை மோதல் குறித்த முழுமையான அறிக்கை இன்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜவீரவிடம் கையளிக்கப்படவுள்ளது. எனினும் தொடர்ச்சியாக விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply