சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்களின் தீபத்திருநாள் வாழ்த்துச்செய்தி

விடியலை எதிப்பார்த்துகாத்திருக்கும் தமிழ்மக்களின் வாழ்வில் இத்தீபத்திருநாளில் இருந்தாவது விடியல் உருவாகவேண்டும் என பிரார்த்திப்பதாக சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் தனது தீபத்திருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்.

கடந்த 3 தசாப்த காலங்களாக பண்டிகைகள் கொண்டாடும் போது  எமது மக்களிற்கு நிம்மதியானதும் சுபீட்சமானதுமான வாழ்க்கை உருவாக வேண்டும் என வாழ்த்தி இறைவனைப்பிராத்தனை செய்து வாழ்த்து தெரிவிப்பது வழமை.எனினும் எமது மக்களின் வாழ்க்கை போலவே அனைவரது வாழ்த்துக்களும் இலவுகாத்த கிளியின்; கதைபோல அமைந்துவிட்டன.
இனிவரும் காலங்களிலாவது எமது மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள அனைவரும் தமது அகங்காரங்களை விடுத்து ஒன்றினைந்து செயற்பட முன்வரவேண்டும் எனவும் நாதியற்று இருக்கின்ற எமதுமக்களை பகடைக்காய்களாக வைத்துக்கொண்டு தமது சுயவிளம்பரத்திற்காக அரசியல் நடாத்தி பனையால் வீழ்ந்தவனை மாடு ஏறி மித்தது போல துன்பத்திற்கு மேலே துன்பங்களை கொடுக்க வேண்டாம் எனவும் இந்ததருணத்தில் கோரிக்கைவிடுக்கின்ற அதேவேளை.,
வடக்கு கிழக்கில் ஜனநாயகம் உருவாக்கப்பட்டு அங்குள்ள மக்கள் சுபீட்சமாக வாழ்கின்றார்கள் என்று உலகநாடுகளிற்கு அரசாங்கம் பறைசாற்றி வருகின்றது.ஆனால் யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகள்  கடந்தபின்பும் எமது மக்களின் வாழ்க்கை இன்னமும் அத்திவாரம் இன்றியே இருக்கின்றது.இல்லங்களில் தீபங்களை ஏற்றி தீபத்திருநாளை கொண்டாட வேண்டிய எம் உறவுகள் இருக்க இடமின்றி நடுவீதியில் நிற்கின்றார்கள்.இவர்களின் வாழ்க்கைக்கு புத்துயிர் கொடுக்க வேண்டிய அரசாங்கம் செயலில் இல்லாமல் அறிக்கைகளில் மட்டுமே புத்தியிர் கொடுத்துவருகின்றது.
எதுஎவ்வாறு இருப்பினும்,இனிவரும் காலங்களில் எமது மக்களின் வாழ்வில் விடியலை உருவாக்க மூத்த அரசியல் தலைமைகள் தமது கோபதாபங்களை மறந்து செயற்படவேண்டும் இல்லையோல் புதியவர்களிற்கு வழிவிட்டு செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்வதுடன்,கடந்த  காலங்கள் போல் அறிக்கைகளில் வாழ்த்து தெரிவித்துவிட்டு இருக்காமல் எமது வாழ்த்துக்கள் செயல்வடிவில் மாற அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றினைந்து இன்றைய காலதேவைக்கு ஏற்ப செயற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதோடு மீண்டும் எம் சொந்தங்களிற்கு தீபத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்;கின்றோம்.
நன்றி
  

ஊடகச்செயலாளர்
எஸ்.செந்தூரன்
 077௧242732                                                            

மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply