இலங்கை தொடர்பான தமது நடவடிக்கைகள் பெருமிதம் அளிக்கின்றது : அமெரிக்கா

இலங்கை தொடர்பான தமது நடவடிக்கைகள் பெருமிதம் அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் இலங்கை விவகாரம் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு சரியானதே என தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை ந்;தாடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் போன்ற விவகாரங்கள் தொடர்பில் இலங்கை இன்னமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனையே அமெரிக்கா வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
 
2009ம் ஆண்டில் அங்கத்துவம் பெற்றுக் கொண்டது முதல் மனித உரிமைப் பேரவையின் மேம்பாட்டிற்காக அமெரிக்கா உழைத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
 
உலகளாவிய ரீதியில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply