இலங்கையில் ஐநா பணியாளர்கள் அச்சுறுத்தலின் மத்தியில் பணியாற்றவில்லையாம் : மஹிந்த சமரசிங்க
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐக்கியநாடுகள் சபையின் பணியாளர்கள் அச்சுறுத்தலின் மத்தியில் இருந்ததாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு இலங்கை மறுப்பு தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் சபைக்கான இலங்கையின் விசேட தூதுவர் மஹிந்த சமரசிங்க இன்று இந்த மறுப்பை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கியநாடுகள் சபையின் இந்த அறிக்கைக்கு நேரடியாக பதில் அளிக்க தேவையில்லை. எனினும் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முறியடிக்க முடியும் என சமரசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் முன்றரை ஆண்டுக்கு முன் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஐநா மன்றம் மோசமாகத் தவறியுள்ளது என்று ஐநாவுக்குள் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை கூறியிருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply