11 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்! 15பேர் பலி, 100 பேர் காயம்
இஸ்லாமியர்களின் புத்தாண்டு பிறக்கவுள்ளதை ஒட்டி ஈராக்கின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். பாக்தாத் மற்றும் ஆறு நகரங்களில் 11 இடங்களில் குண்டுகள் மற்றும் துப்பாக்கியால் சுட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சமயபிரிவு தீவிரவாத குழுக்களிடையே நடந்த இந்த மோதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
குர்திஸ் இனமக்கள் அதிக வசிக்கும் எண்ணெய் வயல்கள் நிறைந்த கிர்குக் பகுதியில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில் பொதுமக்கள் 9 பேர் இறந்தனர். இரண்டு கார் குண்டுகள் வெடித்ததிலும் பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் தொடர் தாக்குதலால் ஈராக் அரசியலில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply