லயன் எயார் விமான பாகங்களை மீட்கும் பணிகள் 14 வருடங்களின் பின் ஆரம்பம்

1998ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதென நம்பப்படும் ‘லயன் எயார்’ பயணிகள் விமானத்தின் உடைந்த பாகங்களை மீட்கும் பணியினை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர். மன்னார் கடலில் இரணைத்தீவுக்கு அப்பால் காணப்படும் இந்த விமானத்தின் பாகங்களை மீட்கும் நடவடிக்கையைப் பார்வையிட நேற்றைய தினம் நீதவான் சென்றிருந்தார்.

நீண்ட காலமாக காணாமல் போனோர் என வகைப்படுத்தப்பட்டிருந்த பயணிகளுக்கு என்ன நடந்தது என தீர்மானிக்கவே நீதவான் சம்பவ இடத்துக்குச் சென்றிருந்தார்.

குறித்த விமானம் விழுந்திருந்த இடத்தை கடற்படையினர் கடந்த மாதம் கண்டுபிடித்திருந்தனர்.

சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் என்பவரிடம் பயங்கரவாத விசாரணை திணைக்கள அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது, 14 வருடங்களுக்கு முன் காணாமல் போன் விமானத்தை புலிகள் சுட்டு வீழ்த்தினர் எனும் தகவலை பெற்றனர்.

ரஷ்ய அன்ரனொவ் 24 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம், கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதிஇ பலாலி விமான நிலையத்திலிருந்து 48 பயணிகள், 6 உக்ரேனிய விமானிகள் சகிதம் இரத்மலானை நோக்கிப் புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அது ரேடாரிலிருந்து மறைந்து போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply