முல்லைத்தீவு கடற்பரப்பில் ​வெளி மாவட்டத்தவர்கள் மீன்பிடிக்க தடை

முல்லைத்தீவு மாவட்டக் கடற்பரப்பில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் எவரும் மீன்பிடித்தொழிலில் ஈடுபடத் தடை விதிக்க, முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஆதரவுடன் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பபதாகவும், இந்த தடைத் தீர்மானத்திற்கு நீரியல் வளத் திணைக்களமும் இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2009ம் ஆண்டுக்கு முன்னர் நாயாறு தொடக்கம் சுண்டிக்குளம் வரையான கடற்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 3000 இற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் தொழில் ஈடுபட்டு வந்தனர். தற்போது யுத்தத்திற்குப் பின்னர் 600 கடற்தொழிலாளர்களே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலைக்கு முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மேற்கொள்ளப்படும் மீன்பிடியே காரணம் எனச் சுட்டிக்காட்டியுள்ள முல்லை சமாசம் இதனால் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படாத வகையில் எமது கடற்பரப்பில் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் மட்டுமே கடற்தொழிலில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு அத்துமீறித் தொழிலில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.அதிகாரி தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply