இலங்கை அரசு நீதித்துறை மீது அதிக பட்ச வன்முறையை மேற்கொண்டு விட்டது!
இலங்கை அரசாங்கம் பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டு வந்துள்ள குற்றவியல் பிரேரணையை இடைநிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான விசேட நிபுணர் கெப்ரியேல் க்னாவுல் இந்த விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் நீதித்துறையை பாதுகாக்க முன்வரவேண்டும். இதற்காக உடனடியான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
உடல் மற்றும் உளரீதியாக நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் மீது அரசாங்கம் மேற்கொள்கின்ற தாக்குதல்கள் உடனடியாக தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டுவந்துள்ள குற்றவியல் பிரேரணை தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நீதித்துறையில் இருந்து உயர் நீதியரசர் நீக்கப்படுவதே, நீதித்துறை மீது அரசாங்கம் மேற்கொள்கின்ற அதிகப்பட்ச வன்முறையாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply