தெரிவுக்குழு முன் சமூகளிக்குமாறு பிரதம நீதியரசருக்கு அழைப்பு

குற்றப்பிரேரணை தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் எதிர்வரும் 23ஆம் திகதி சமூகமளிக்குமாறு பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசருக்கு எதிரதாக 14 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆளும் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பிரேரணை மீதான விசாரணை எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த குற்றப் பிரேரணையை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள 11 பேரடங்கிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தலைமை வகிக்கின்றார்.

இந்நிலையில், 23ஆம் திகதி தெரிவுக்குழுவின் முன் ஆஜராகும் பிரதம நீதியரசர், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் தாக்கல் செய்வதற்காக கால அவகாசம் கோரலாம் என்று மேற்ப தெரிவுக்குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply