நான் பாடுபட்டதை பொன்சேகா மறந்து விட்டார் – அர்ஜுன ரணதுங்க

ஜனநாயகக் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து விலகியமை குறித்து ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ஜுன ரணதுங்க மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் விளக்கமளித்துள்ளனர். இது குறித்து கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு அவர்கள் நேற்று கடிதம் அனுப்பியுள்ளனர்.

கட்சி பதவிகளில் இருந்து விலகியபோதும் தொடர்ந்தும் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பில் இருந்து செயற்படவுள்ளதாக அர்ஜுன ரணதுங்க தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு 3 மாதங்களில் அதற்காக தான் பாடுபட்டதை சரத் பொன்சேகா மறந்துள்ளமை கவலையளிப்பதாக டிரான் அலஸ் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply