13வது திருத்தச் சட்டம் இரத்து செய்வதென்றால் பௌத்த மதத்தையும் இரத்து செய்ய வேண்டும்

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு கூக்குரலிடுவோர் அந்த திருத்தச் சட்டம் இரத்துச் செய்யப்பட்ட பின்னர், வழங்க போகும் மாற்று திட்டம் என்ன என்பதை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் பத்தேமகம சமித்த தேரர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நடந்து விட்டால், எமது நாடு சர்வதேசத்தின் முன்னிலையில் மிலேச்சத்தனமான, வலதுகுறைந்த நாடாக மாறிவிடும். எவர் எதனை கூறினாலும் சர்வதேச சமூகம் இன்றி எம்மால் வாழ முடியாது. வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு ஓரளவேனும் தீர்வு வழங்கும் நோக்கத்தில் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்தியா- பண்டைய காலம் தொட்டு இலங்கையுடன் நெருங்கி செயற்பட்டு வரும் நாடாகும். வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் கடுமையான தேவை இந்தியாவுக்கு இருந்தது. இதற்கு ராஜதந்திர ரீதியிலான தீர்வை முன்வைக்கும் தேவை இந்தியாவுக்கு இருந்தது. இந்த திருத்தச் சட்டம் இந்தியாவினால் இலங்கைக்கு பலவந்தமாக திணிக்கப்பட்ட தீர்வு எனக் கூறுகின்றனர். இலங்கை மீது பலவந்தமாக பருப்பு போட்ட கதையை கூறுகின்றனர்.

அன்று இயக்கர், நாகர்கள் வாழ்ந்த இலங்கைக்கு பௌத்தம் மதம் எம்மை கேட்டு வழங்கப்படவில்லை. பௌத்த மதம் எம்மை கேட்டு அனுப்பி வைக்கப்படவில்லை. அப்படியானால் பௌத்த மதத்தையும் இரத்துச் செய்ய வேண்டும்.13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் பாரிய பிரதிபலன்களை கொடுத்தது. அன்று ஆயுதங்களை தாங்கி இருந்தவர்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசியல் நிரோட்டத்தில் இணைந்து கொண்டனர் எனவும் பத்தேகம சமித்த தேரர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply