ஜனாதிபதி மஹிந்த கசகஸ்தானுக்கு விஜயம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கசகஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது 24 நாடுகளின் அங்கத்துவத்தைக் கொண்ட ஆசிய தொடர்புகள் நம்பிக்கையை கட்டியெழுப்பும் அமைப்பின் மாநாட்டின் அவதானிப்பு நாடாக இடம்பெறுவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுக்கவுள்ளார்.
அத்துடன் கசகஸ்தான் நாட்டின் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் இருதரப்பு உறவுகளை கட்டியெழுப்புவது குறித்தும் கலந்துரையாடவுள்ளார்.
கசகஸ்தான் அரசாங்கத்தின் யோசனைக்கு அமையவே இந்த ஆசிய தொடர்புகள் நம்பிக்கையை கட்டியெழுப்பும் அமைப்பு 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆசியாவில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஏற்கனவே இந்த அமைப்பின் அவதானிப்பாளர்களாக அமெரிக்கா ஜப்பான் மலேஷியா பங்களாதேஷ் ஆகிய நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபை அராப் லீக் போன்ற அமைப்புக்களும் செயற்படுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply