ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப்பிரேரணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை பதவிநீக்கம் செய்யும் ஒழுங்காற்று நடவடிக்கைகளை இலங்கை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் தனித்துவத்துக்கான ஐ.நா மன்றத்தின் சிறப்பு பிரதிநிதி கேப்ரியல் க்னவுல் கோரியுள்ளார். அப்படி இல்லாத நிலையில் ஷிரானி பண்டாரநாயக்க மீதான ஒழுங்காற்று நடவடிக்கைகள் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் நியாயமான நடைமுறைகளின் அடிப்படையில் அமையவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்குவது தொடர்பான இலங்கை அரசியல் சட்டத்தின் 107ஆவது பிரிவின் மூலம் இலங்கை நாடாளுமன்றம்இ இலங்கையின் நீதித்துறையின் மீது கணிசமான செல்வாக்கை செலுத்துவதாக தெரிவித்திருக்கும் கேப்ரியல் க்னவுல், இது இலங்கை நாடாளுமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் இடையிலான அதிகாரப்பகிர்வு என்கிற தத்துவத்திற்கு எதிராக இருப்பதாகவும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தங்களுக்கு எதிராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இலங்கையின் நீதித்துறைகுறித்து விடுத்திருக்கும் விரிவான அறிக்கையில், இலங்கையில் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அலுவலர்கள் மீதான அழுத்தங்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பான செய்திகள் தொடர்பில் அவர் ஆழ்ந்த கவலை வெளியிட்டிருக்கிறார்.
இலங்கை நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மீதான தாக்குதல்கள்இ அச்சுறுத்தல்கள், பதில் நடவடிக்கைகள் மற்றும் தலையீடுகளின் ஒருபகுதியாகவே இந்த நடவடிக்கைகள் அமைவதாக கொள்ளவேண்டி வரும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply