ஐக்கிய நாடுகள் சபை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் !

இலங்கை யுத்தத்தில் தமிழ் மக்களை பாதுகாக்கத் தவறிய ஐக்கிய நாடுகள் சபை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டடைப்பு வலியுறுத்தியுள்ளது.  ஐநா உள்ளக அறிக்கையில் இலங்கை யுத்தத்தின் போதான ஐநாவின் செயற்பாடு வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இறுதிக் கட்ட யுத்தத்தில் வன்னிப்பகுதியில் இருந்து ஐநா உத்தியோகத்தர்கள் விலக்கிக் கொள்ளப்பட்டதையும் சுமந்திரன் நினைவுபடுத்தியுள்ளார்.

ஐநாவின் இந்நடவடிக்கையை எதிர்காலத்திற்கான நல்ல பாடம் என மாத்திரம் கருத முடியாதெனவும் இறுதி யுத்தம் இடம்பெற்ற இடத்திற்கு ஐநா சென்று புலிகள் மற்றும் இராணுவத்தின் யுத்தக் குற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் ஐநா தனது தவறினை உணர்ந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply