ஜனாதிபதி – உலக வங்கி முகாமைத்துவ பணிப்பாளர் இந்திரவதி சந்திப்பு
நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீ முல்யாணி இந்திரவதிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. உலக வங்கியின் பிரதிநிதிகளும், திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் 19 திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர் இங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிடவுள்ளதுடன் நாட்டின் முன்னேற்றத்திற்கு இந்த அபிவிருத்தி நிறுவனம் எவ்வாறு கூடுதலான ஒத்துழைப்புகளை வழங்களாம் என்பது தொடர்பிலும் ஆராயவிருக்கின்றார்.
இலங்கை அரசாங்கத்திற்கும் உலக வங்கிக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவது தொடர்பில் இவர் தனது விஜயத்தின் போது முக்கிய கவனம் செலுத்தவுவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply